இன்ஸ்டா மற்றும் சமூக இணையதளங்களில் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வழியாக ரசிகர்களுடைய பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் எந்த புகைப்படத்தில் சிரித்தபடி காணப்படும் சிறுவன் தற்பொழுது முன்னணி கதாநாயகர்களுக்கு டக் கொடுக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பிரபலமான நடிகர் தான்.
ஆரம்ப காலகட்டங்களில் கல்லூரி விழாக்கள் மற்றும் மேடைகளில் மிமிக்ரி செய்து வந்த அவர், ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறியவர்.
அவர் வேறு யாரும் அல்ல... சமீபத்தில் இசையமைப்பாளர் ஒருவரால் மிகவும் கீழ்த்தரமாக பேசப்பட்டு வந்தவர் தான்.
ஆனால் அந்த சர்ச்சைக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன்னுடைய பணிகளில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் சிவகார்த்திகேயன் தான் அவர்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் நீர் தளங்களில் தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இவர் மீது தற்பொழுது எதிர் விமர்சனங்கள் வந்த பொழுதும் கூட, அதற்கு பதில் கூட அளிக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று தன்னுடைய திரைப்பட வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு நடித்துக் கொண்டும் இருக்கிறார்.
சாதாரண குடும்பத்தில் இருந்து தற்பொழுது உலகம் முழுவதும் தெரியும்படியான பிரபலமான நடிகராக மாறியதில் சிவகார்த்திகேயனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்று அவருடைய நன்கு அறிந்த நண்பர்கள் வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் அவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு அது தற்பொழுது வைரலாகி வருகிறது.