திமிரு படத்தில் நடித்த நடிகையா இவங்க? அட .. ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே ..!

 

thimiru movie actress

டைரக்டர் தருன் கோபி இயக்கிய ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் திமிரு. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் அவர்களும் கதாநாயகியாக ரீமாசென் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் பேசும்படியாக நடித்து அசத்தியவர் வில்லி வேடத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி. அப்பொழுது அவருடைய நடிப்பை கண்டு பலரும் பாராட்டி அசந்து போயினர்.

கொடுத்த கேரக்டரில் தத்ரூபமாக நடித்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

பள்ளிக்கூடம் வெயில் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு நடிகர் விஷால் அவர்களின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. ஹைதராபாத்தில் பிறந்த அவருடைய தந்தை ஒரு கிரிக்கெட் வீரர். அவருடைய பெயர் பரத் செட்டி. படிக்கும்போது மாடலிங் ஈடுபட்ட ஸ்ரேயா ரெட்டி அதன் பிறகு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினையாகவும் பணியாற்றினார்.

இவருக்கு தமிழில் முதல் படம் விக்ரம் நடித்த சாமுராய் திரைப்படம் தான். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான அண்டாவை காணோம் என்ற திரைப்படத்தில் வில்லியாக நடித்தார்.

குறுகிய காலத்தில் தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்தவர் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் போனது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

இப்பொழுது அவருடைய புகைப்படம் சமூக இணையதளங்களில் வெளியாகிய ரசிகர்கள் எழுதிய பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்த திமிர் பட நடிகை எது என்று பலரும் கேள்வி கேட்டு கருத்து வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post