மறைந்த மகள் பவதாரணி நினைவாக இளையராஜா செய்துள்ள அருமையான விஷயம்.
70'களில் ஆரம்பித்த இன்றுவரை இசையமைப்பாளராக வேலை செய்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த மகள் பவதாரணி நினைவாக ஆர்கெஸ்ட்ரா ஒன்றை ஆரம்பித்துள்ளார்..
அவரது மகள் பவதாரணி போன வருடம் ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் நினைவாக தற்போது இசையமைப்பாளர் இளையராஜா 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்..
இதில் பெண் பாடகர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com இந்த மெயிலுக்கு தங்களை விவரங்களை அனுப்பலாம் என அவர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்த அறிவிப்பை ஒட்டி பல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!

0 Comments