லியோ திரைவிமர்சனம்
தமிழ் சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் தளபதி விஜய் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் "லியோ".
இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில், இதுவரை விஜய் நடித்திராத கோணத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து அளித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
முற்றிலும் வித்தியாசமான இந்த தமிழ் திரைப்படத்தில் விஜய், கொச்சை வார்த்தை பேசுவதுபோல காட்சியமைக்கப்பட்டது சர்ச்சயை ஏற்படுத்தியது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம் மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , படம் உருவான தேதியிலிருந்து, வெளியிடப்பட்ட இன்றைய தேதி வரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
உருட்டு:
இத்திரைப்படமான இதுவரை விஜய் படம் வசூலிக்காத அளிவிற்கு ஒரே நாளில் 100 கோடி, ஒரே நாளில் ஆயிரம் கோடி இஷ்டத்திற்கு சமூக இணையதளங்களில் யூடூப் முதல் பேஸ்புக் வரை உருட்டுகள் அள்ளி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் புள்ளி விபரங்களின் படி,முதல் நாள் பிரீ ஷோ பதவின் அடிப்படையில் முதல் நாள் 57 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்காக இலவச ஷோ க்களை கணக்கிடும்பொழுது, இந்த தொகை இன்னும் குறைவாகவே இருக்கும் என்று கருதுகின்றனர்.
இதற்கிடையே விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்படி இல்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் விஜய் நடித்த லியோ திரைப்படம், mouthe refrence எனப்படும் வாய்மொழி விமர்சனம் மூலம், அதிக அளவு வசூல் செய்து வெற்றிப்படமாக அமைகிறதா? அல்லது தோல்வி படமாக முடிகிறதா என அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வருகை மற்றும் அவர்களின் ரசனை பொருத்து அமையும் என்று கருதப்படுகிறது.
#லியோ #விமர்சனம் #தமிழ்திரைப்படம் #விஜய்.