லோகேஷ் கனகராஜின் சினிமா வாழ்க்கை முடியப் போகிறதா? லியோ படத்தால் வந்த சர்ச்சை !

கேள்விகுறியாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சினிமா எதிர்காலம் ?


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்கள். 

கார்த்தி, கமல் என முன்னணி நாயகர்களை வைத்து இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். 

அந்த வகையில் தற்பொழுது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்த "லியோ" திரைப்படமும் வந்து சேரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆனால் படத்தில் பல்வேறு இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கதையை மட்டுமே நம்பி படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் "லியோ" படத்தில் ஏதோ தனது பாணியிலிருந்து தவறியிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டிருப்பதாக அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர்.


lokesh kanagaraj cinema carrier

இது முழுக்க முழுக்க விஜக்காக மாற்றி அமைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

பொதுவாக ஜனரஞ்சகமான , குடும்பத்தோடு வந்து பார்க்கும் விதமாக இருக்கும் என்ற சொல்லப்பட்ட இத்திரைப்படத்தில் , தகாத வார்த்தையை விஜய் பயன்படுத்தியிருப்பது போன்ற காட்சி அவருடைய ரசிகைகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் சினிமா கரியர் பாதிக்கப்படுமா என்ற கோணத்தில் பலரும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். 

lokesh kanagaraj cinema carrier

வித்தியாசமான கோணத்தில்யோசித்து, எவரும் எதிர்பார்க்க முடிவு கொடுத்து, படத்தை ரசித்து இயக்கி முடிப்பவர் லோகேஷ் கனகராஜ் என்ற விதியை இந்த படத்தில் அவர் மீறியுள்ளார் என்றே சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். 

திரைப்படமான விஜய் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் கூட , பல இடங்களில் படம் குறித்து எதிர்மறையான கருத்துகளையே முன் வைக்கின்றனர்.


இதனால் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்பொழுதே எழுந்துள்ளது.