பொதுவாகவே சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு நடிகர், நடிகைகள் செல்வது குறிக்கோளாக இருக்கும். சிலருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கும் உடனடியாக.
மிகப் பலருக்கோ அதிக நாட்கள் பிடிக்கும். வாய்ப்புகள் கிடைத்தாலும்,அதை தக்க வைத்துக்கொள்வது என்பது சினிமாவை பொறுத்தவரை குதிரைகொம்பு.
அப்படி சென்றவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக மாறியுள்ளார். அந்த வகையில் நடிகை ரெஜினா, திரிஷா உடன் மூன்றாவது ஹீரோயினாக இணையவுள்ளார் நடிகை பவானி சங்கர்.
இவர் முதன் முதலில் சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளராக பணியில் சேர்ந்து, அதன் பிறகு படிப்படியாக பெரிய திரைக்கு வந்தவர்.
தற்பொழுது கைநிறைய பட வாய்ப்புகள் உள்ளதாக அவரை பற்றி அறிந்த நட்பு வட்டாரங்கள் தெரிவிள்ளன.
அஜீத் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க தான் இந்த பேரதிர்ஷ்டம் நடிகை பவானி சங்கருக்கு கிடைத்துள்ளது.