நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி, ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமா கம்பெனிகளில் ஆபீஸ் பாயாக இருந்து வந்த யோகி பாபுவிற்கு, அடுத்தது அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம், கதாநாயகனாக அறிமுகமான யோகி பாபு, லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்பட்ட நயன்தாரா அவர்களுடன் ஜோடி சேர்ந்து அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது.
நடிகர் அஜித்துடன் விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பரவலான ரசிகர்களைப் பெற்றார்.
ஒவ்வொரு கதாநாயகனின் நடிக்கும் திரைப்படங்களிலும் அவர் ஏதாவது ஒரு காட்சியில் வந்து போகும் அளவிற்கு மிகப் பெரிய ஆனார்.
தற்பொழுது வரை புதிய திரைப்படங்கள் அனைத்திற்கும் இவரின் கால் சீட் கிடைக்காததால், காத்திருந்து திரைப்படத்தை எடுத்து முடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. சாதாரண குடும்பத்தில், தனக்கேற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது ஆணவத்தில் அழியும் நடிகர்களுக்கு மத்தியில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிக எளிய தோற்றத்தில் யோகி பாபு இருந்து வருகிறார்.
ஸ்டார் ரஜினிகாந்த் முதல், தற்போது முன்னணி நட்சத்திரமாக உள்ள விஜய் வரை அனைவருக்கும் பாந்தமாக ரசிகர்களுக்கு பிடித்தவராக இருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு ஒரு சகோதரி உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தோற்றத்தில் பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு போலவே அவர் இருக்கிறார்.
அவர் சகோதரி என கருதப்பட்டவர் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.