33 வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கும் மைக் மோகன் .. ஹீரோயின் யார் தெரியுமா?

 

mic mohan latest movie updates

80 கால கட்டங்களில் "மைக்" மோகன் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கமலுக்கு "ஆல்டர்நேட்" ஆக தயாரிப்பாளர்கள் அணுகியது இவரைத்தான். 


இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் மைக் பிடித்துக் கொண்டு பாடல் பாடுவது போன்ற திரைக்கதை அமைந்திருக்கும். 

நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் இவரை ரசிகர்கள் "மைக்மோகன்" என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டனர். அதுவே நிலைத்துவிட்டது. 

90 களுக்குப் பிறகு இவர் படம் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடித்த ஒரு சில படங்களும் சரியாக போகாத தால், நடிப்பதை நிறுத்தியிருந்த மோகன், சமீபத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு வில்லனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் மீண்டும் இவர் கதாநாயகனாக நடிக்க "ஹரா" என்ற திரைப்படம் உருவாகி கொண்டுள்ளது. 


இதில் அயலி வெப் சீரிசில்  நடித்த நடிகை அனுமோல் ஜோடியாக நடித்து வருகிறார். 

அத்திரைப்படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளன. 


mic mohan latest movie updates