நெஞ்சை உருக வைக்கும் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடைசி கடிதம்...!

vijay antony daughter last words in letter



தற்கொலை என்பது மனிதர்களுக்கு தேவையில்லாத ஒரு விஷயம். இயற்கையாக கொடுத்த உயிரை நமக்கு நாமே மாய்த்துக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இயற்கையாய் பிறப்பெடுத்த நாம்.. இயற்கையாய் மரணிப்பது தான் சாசு வதம்.

அப்படி அல்லாமல் நமக்கு நாமே முடிவை தேடிக்கொள்வது என்பது இயற்கைக்கு எதிரானது கூட. நாம் உற்றார் உறவினர்கள் மற்றும் சுற்றார் நண்பர்கள் என அனைவரையும் கதற கதற துடிக்க வைத்து விட்டு அது போன்ற மோசமான செயல்களை ஈடுபடுவது என்பது மிகவும் குற்றம்.

சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக, இந்த உலகத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா என்று, நமக்கு நாமே கேட்டுக் கொண்டு, இப்படிப்பட்ட மிக பெரிய விதமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையை நோக்கி தள்ளி விடுகிறது.

முடிவெடுப்பதற்கு முன்பாக ஒரு சில நொடிகளில் நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை நினைத்து பார்த்து, அவர்களின் எதிர்காலம் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுடைய துக்கம் தோய்ந்த முகத்தை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால், நிச்சயமாக அது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்த நமக்கு மனது வராது.

எந்த ஒரு பிரச்சனையும் என்றாலும் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கொன்று தீர்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் மனசு லேசாகும். அமைதி பெறும். தேவையற்ற விபரீதமான எண்ணங்களை தடுத்து நிறுத்தும்.

விஜய் ஆண்டனியின் மகள், அவரது தாயிடமோ அல்லது தந்தையிடமோ அல்லது நண்பர்களிடமோ அவருக்கு இருந்த பிரச்சனையை பற்றி பேசி இருந்தால், இது போன்றதொரு விபரீதமான முடிவு எடுத்திருக்க மாட்டார்.

கடைசி கட்டத்தில் அவர்கள் எழுதிய கடிதம் ஆனது தற்பொழுது வெளியாகி உள்ளது.,

அதில், நான் என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களை மிகவும் மிஸ் செய்வேன் என அதில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது மரண செய்தியை கேட்டதும், கோலிவுட் நடிகர் நடிகைகள் பெரும்பாலானவர் விஜய் ஆண்டனி வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த வண்ணம் உள்ளனர்.

விஜய் ஆண்டனி முதல் மகளான இவர் இப்படிப்பட்ட முடிவை எடுப்பார் என்று ஒருபோதும் கனவில் நினைக்கவே இல்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி நடிகர் சத்யராஜ் அவர்கள் குறிப்பிடுகையில், இது போன்ற ஒரு மோசமான முடிவை யாவருமே எடுக்கக் கூடாது என்று. தெரிவித்துள்ளார் எப்படிப்பட்ட பிரச்சனை என்றாலும் அதை பேசி தீர்ப்பது தான் சரியான முறை என்று அவர் தன்னுடைய கருத்தை அந்த துக்க நிகழ்வில் தெரிவித்துள்ளார்.