விஜய் ஆண்டனி நடிகர் மட்டுமல்ல ஒரு தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட. தன்னுடைய படங்களில் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதில் முதன்மையாக இருந்தவர்.
தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்தவர். அவருடைய திரைப்படங்களின் தலைப்புகளை அவருடைய எண்ணங்களை வெளிப்படுத்தும்.
பிச்சைக்காரன். கொலைகாரன். பிச்சைக்காரன் 2 இப்படி ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமூக சீர்திருத்த கருத்துகளை வெளியிட்டு இந்த சமூகத்திற்கு நல்லது செய்யும் விதமாக தன்னுடைய பங்களிப்பை சினிமாவின் மூலம் கொடுத்தவர்.
அவரது மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்தையே புரட்டி போட்டது விட்டது.
தொடர்ந்து துக்கத்தை அனுசரித்து வரும் இந்த நிலையில், விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தமிழகத்தில் ஏறக்குறைய தமிழக சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூடாமல், சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவரும் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய போஸ்டரை, இன்று வெளியிடுவதில் இருந்து நாளை ஒத்தி வைத்துள்ளார்.
அந்த பட குழுவினர் டுவிட்டர் பக்கத்தில், விஜய் ஆண்டனியின் இந்த துக்ககரமான சூழ்நிலையில் எங்களது படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது.
எனவே அந்த லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுகிறோம் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
சினிமா மாட்டார்கள் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருமே விஜய் ஆண்டனி மகள் திடீர் தற்கொலைக்கு துக்கம் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய பட போஸ்டரை வெளியிடாமல் நாளை வெளிவருவதாக எடுத்த முடிவு ரசிகர்களுக்கு மேலும் அவர் மீது மரியாதை உண்டாக்கி உள்ளது.