ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, யூடியூப் பிரபலம் குழந்தை ரித்விக், மலையாள நடிகர் விநாயகம் ஆகியவர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படத்தில், அதிரடி காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
திரைப்படத்தின் இடையே ஒரே ஒரு குத்தாட்ட பாடல் இடம்பெற்று இருந்தது.
இதில் நடிகை தமன்னா அவர்கள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார்.
இந்த நிலையில் படம் வெற்றி பெற்றதை எடுத்து அதில் நடித்த ஹீரோ மற்றும் டைரக்டர் நெல்சன் அவர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார்.
அதேபோல ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவர்க்கும் காரை பரிசாக அளிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்மையில் படத்தை விட அந்த பாடல் தான் மெகா ஹிட் அடைந்தது. அந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவுக்கும் கார் பரிசளிக்க வேண்டும் என்று வேடிக்கையாக விமர்சனம் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.