actress kousalya latest update90களில் மக்களின் மனதை தொட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கௌசல்யா.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் தெரியும் மின்னியவர். முரளியுடன் ஜோடியாக நடித்த திரைப்படம் மிகப் பிரபலமானது.
ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், மீண்டும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார்.
அதற்கிடையே அதிக எடை போட்டு பார்ப்பதற்கு இது கௌசல்யா தானா என்ற நிலையில் தன்னுடைய பிட்னஸ் மிக மோசமானதாக வைத்திருந்தார்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசிப் பழகும் நடிகை கௌசல்யா அவர்கள்
இதுவரைக்கும் திருமணம் செய்யவில்லை.
காரணம் அவரிடம் கேட்டபோது, என் மனதிற்கு பிடித்தவர் இதுவரை யாரும் அமையவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் முன்னதாக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும், அது பாதியில் பிரேக்கப் ஆனதால் இதுவரைக்கும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருவதாகவும் வதந்தி ஒன்று பரவியது.
அதை மறுத்து பேசிய கௌசல்யா, தன் மனதிற்கு பிடித்த ஒருவர் கிடைக்காததால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதாகவும்,
உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகள் விளைவாக அதிக எடை போட்டு விட்டதாகவும் அவர் இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே பதிலாக தெரிவித்து இருந்தார்.