இளைய தளபதி போல இளைய இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜயின் மகன் JASON SANJAY
தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவது குறித்து லண்டன் ,கனடா மற்றும் அமெரிக்காவில் படித்தார்.
அவர் அப்படிப்பை முடித்த பின்பு பல்வேறு இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் அவரை திரைப்படத்தில் நடிக்க வருமாறு கூறினார்கள் .தாங்களே நடிகர் போலே உள்ளீர்கள் தாங்கள் நடிக்க வரலாமே என்று கூறினார்கள் ஆனால் அதற்கு ஜேசன் சஞ்சய் ஒத்துழைக்கவில்லை.
தளபதி விஜயுடன் கேட்டபோதும் அவர் தன் மகனை விருப்பமே தன் விருப்பம் என்று கூறிவிட்டார்.
மேலும் ஜேசன் சஞ்சய் தனக்கு நடிப்பதில் விருப்பமில்லை மற்றும் இயக்குனராக பணி புரிவது எனக்கு மிகவும் பிடித்த தொழில் என்று கூறினார் மேலும் இவர் ட்ரிகர் என்னும் ஒரு குறும்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.
இவர் தனது தாத்தா ராஜசேகரை போல இயக்குனராக வலம் வருவார் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து இயக்கப் போகிறார் மேலும் இத்தகவலை லைக்கா நிறுவனம் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.
லைக்கா நிறுவனம் அவ்வளவு எளிதாக எந்த படத்திற்கும் தயாரிப்பு வழங்காத ஆனால் இவருடைய கதையை கேட்ட பின்பு மட்டுமே அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனது முதல் படத்தில் ஜேசன் சஞ்சய் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளை வைத்து படம் இயக்க உள்ளார்.
மேலும் அவரை முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.