ஜெயில் திரைப்படம் வெளியாகி தற்பொழுது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும். ரஜினி தமன்னா, குணசேகரன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நகைச்சுவை மற்றும் தீவிரமான அதிரடி கலைக்களமாக அமைந்த இந்த திரைப்படத்தில், ரஜினியின் மகன் கடைசி வரைக்கும் திருந்தாத போலீஸ் அதிகாரியாக நடித்தது கதையின் புதிய கோணமாக அமைந்திருந்தது.
இடையே வந்து சிரிப்பை மூட்டி போகும் யோகி பாபு மற்றும் கிங்ஸ்லி போன்ற ஒரு நகைச்சுவை ஓரளவுக்கு மக்களிடையே ஈடுபட்டது என்று தான் சொல்ல முடியும்.
இந்த படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடைபெற்றதாக ஆடியோ லான்ச்சில் டைரக்டர் நெல்சன் தெரிவித்திருந்தார்.
படப்பிடிப்பில் சரியாக நடிக்காத துணை நடிகர் ஒருவரை நெல்சனின் அசிஸ்டன்ட் ஒருவர் நீக்கியதாகவும், அதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனடியாக அந்த துணை நடிகரை வரவழைத்து,
எவ்வளவு ஆசை ஆசையாக நடிக்க வந்திருப்பார் எனவே இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த துணை நடிகரை அழைத்து தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், தொடர்ந்து அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்று தந்தார் என்று அந்த துணை நடிகர் நிகழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.