நடிகர் கவினின் அடுத்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! ! மேலும் நடிகர் கவின் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்களின் மனதை ஈர்த்த கவின். இத்தொடர் முடிந்த பின்பு படங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அடுத்து இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசனில் கவின் மற்றும் லாஸ்ட்லியாவை பற்றி பல்வேறு தவறான செய்திகள் பரப்பி வந்தன.
அடுத்ததாக இவர் நடித்த டாடா படத்தின் மூலம் பெரும் வெற்றியை ஈற்றி மற்றும் பெரும் ரசிகர்களின் பட்டாளத்தை பெற்றார்.
படத்தினை பல்வேறு பிரபலங்கள் பாராட்டினர்.
கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பேஜில் பதிவு செய்துள்ளார். அவரது ரசிகர்கள் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கவின் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பும், வினோத் ராஜ்குமார் கலை இயக்க பணிகளையும் செய்ய உள்ளனர்.
இந்த படத்தின் சிறப்பு முன்னோட்டம் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என்று கவின் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிட்ட பதிவில் கவின் கூறி இருப்பதாவது:
"வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!" கூறியது மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பேஜிலும் அவ்வாறே தனது பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பதிவு செய்துள்ளார்.