சூர்யாவின் கங்குவா படத்தின் லிட்டில் பிட் மூவி சீன் செம மாஸா இருக்கா கூறிய பிரபலம் யார்?..
350 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார் மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் .இப்படத்தின் கதாநாயகன் சூர்யா மற்றும் கதா நாயகி திஷா பதாணி நடித்துள்ளனர்.
இப்படத்தில் யோகி பாபு ,கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அப்படத்தின் சில காட்சிகளை கண்டு வியந்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியதாவது அவர் கங்குவா படத்தின் ஒரு சில காட்சியை மட்டுமே பார்த்துள்ளார். அக்காட்சியானது மிகப் பிரம்மாண்டமாக உள்ளது மற்றும் தன்னை வியப்பில் ஆழ்த்தியது என்று புகழ்ந்துள்ளார்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா படத்திற்காக தேசிய விருது பெற்றதற்கு சூர்யா தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.
படத்தின் ஒரு சிறு காட்சியை பற்றி கூறியதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
0 Comments