பிரபல தொலைக்காட்சியில் தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை பவானி சங்கர்.
இத்தொடரில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்த இவர், அடுத்ததாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதன் மூலம் ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற பவானி சங்கர், தொடர்ந்து இருபது படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
இந்த நிலையில் தெலுங்கில் கோபி சாந்த் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். அப்படத்திற்கு பிறகு தெலுங்கு பக்கமே போக மாட்டேன் என்று விதத்தில் பவானி சங்கர் பேசியுள்ளார்.
தமிழில் மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவும், அதிக அளவில் தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைப்பதால், மற்ற மொழிகளில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும் பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு தெரிந்து தெலுங்கு படம் ஒன்றில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.