நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, அதன்பின்னர் நடிகையாக தமிழ் சினிமா உலகில் வலம் வந்தவர்.குழந்தை நட்சத்திரமாக மகளாக நடித்த நடிகர்களுக்கு, பின்னாளில் ஜோடியாக நடித்து தன்னுடைய சினிமா கரியரில் மிகப்பெரிய சாதனையை படைத்தவர்.
அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி மகுடம் சூட, அவருக்கென்று தமிழகம் மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் உருவாகி கொண்டாடி வந்தனர்.
நடிகை மீனா நடித்த திரைப்படம் வெற்றி பெறும் அளவிற்கு அவருடைய அழகும் நடிப்பும் இருந்தது.
பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற அவர் தொடர்ந்து சினிமா திரைப்படங்களில் நடித்த, திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும் வந்தார்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திருமண வாழ்வில் ஈடுபட்ட அவர், அவருக்கென்று நைனிகா என்ற பெண் குழந்தையும், ஒரு அழகான கலவரம் இருந்தனர்.
திடீரென மீனாவின் கணவர் மாரடைப்பால் இறந்துவிட, அவருடைய வாழ்க்கை சூனியமானதாக இருந்தது.
அதன் பிறகு திரை உலகை அவருக்கு கை கொடுக்க, தற்பொழுது தொடர்ந்து சினிமா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறுவதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
அவருடைய நெருங்கிய நண்பரான ஒருவரை தான் அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதன் பிறகு அவருடைய மகள் நைனிகாவின் நிலை என்ன என்பது பற்றியும் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.
அது பற்றிய தகவல்களை அறிந்த நடிகை மீனா, அது பரபரப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு புரளியான போலியான செய்தி என்றும், தான் இரண்டாம் திருமணம் செய்யப் போவதில்லை என்றும், தன்னுடைய மகளுக்காக மட்டுமே தன்னுடைய நேரத்தை செலவிடுவதாகவும் அவர் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.