நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி. நம்பர் ஒன் தொகுப்பாளனியாக இருந்தவர் இவர்.
தன்னுடன் பணியாற்றிய நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொண்டு, ஒரு வருடம் மட்டுமே திருமண வாழ்வை கடந்த டிடி, அதன் பிறகு ஏற்பட்ட மணக்கசப்பால் விவாகரத்து பெற்றார்.
தொடர்ந்து தொகுப்பாளினியாக வலம் வந்த டிடி அவர்கள் திடீரென பொதுவெளியில் முகம் காட்டாமல் இருந்தார்.
சினிமா மேடைகள் மற்றும் விழா மேடைகளில் தொகுப்பாளினியாக சிறந்து விளங்கி வரும் அவர், திடீரென காணாமல் போனது குறித்து ரசிகர்கள் குழம்பி இருந்தனர்.
அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக, அறுவை சிகிச்சை செய்ததால், அதன் பிறகு சிறிது நாட்கள் வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
ஒரு நிகழ்ச்சிகளில் மட்டுமே தற்பொழுது பங்கேற்று வரும் தொகுப்பாளனி டிடி பிரபல தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னை ஒரு நடிகை மிகவும் அவமானப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அவரை மரியாதையாக நடத்தி பேட்டியை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை போன்றவே நீதியும் ஆடை அணிந்து இருந்ததால், நீ அந்த அளவிற்கு பெரிய ஆளா? என்ற தொனியில் அவர் மிடுக்காக பேசி, அவரை அவமான படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய ரசிகர்கள் மீண்டும் வந்து, பழைய டிடியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.