விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மைனா நந்தினி தற்பொழுது புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார்.
விஜய் டிவியில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மைனா நந்தினி, யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு அழகிய ஒரு ஆண் குழந்தை உள்ளது. இது ஒரு கனவு வாகனம், இந்த வாகனத்தை வாங்குவதற்காக நிறைய நாள் உழைக்க வேண்டியிருந்தது என்று மைனா நந்தினி கூறி உள்ளார்.
தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கேரம்ஸ் மாடல் காரை இவர் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரின் விலை கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
தன் கணவர் மகன் உடன் சென்று காரை டெலிவரி எடுத்த மைனா நந்தினி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர்.