இனி எந்த மூலையில் வேண்டுமானாலும் நான் போய் பாடுவேன் எனக்கு பயமில்லை! சூப்பர் சிங்கர் அருணா கண்ணீர் பேட்டி!


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருப்பவர் சூப்பர் சிங்கர் அருணா. இவர் பக்தி தொடர்பான பாடல்களை பாடி அனைவரையும் மாசத்தை வந்தார்.

குரல் வளம் இவருடைய சொத்து. பல்வேறு பிரிவுகளில் நடந்து வந்த சூப்பர் சிங்கர் போட்டிகள் அனைத்திலும் இவர் வெற்றி பெற்று தற்பொழுது இறுதிப் போட்டியில் சில லட்சங்கள் மதிப்பிலான வீட்டையும் வென்றுள்ளார்.


இறுதிப்போட்டியில் மக்கள் மற்றும் நடுவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வென்றிருக்கும் அருணா அவர்கள், அதே மேடையில் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையை ஒன்றையும்கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.


பல்வேறு இடங்களில் கோயில்களில் தான் மேடைகளில் பாடி இருப்பதாகவும், பாடி முடித்தவுடன் நீங்கள் என்ன கேசட் என்று ஒரு சிலர் வந்து தன்னை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது தன்னுடைய சாதியைப் பற்றி சொன்னால் எங்கே வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று அப்படி கேள்வி கேட்பவர்களை தவிர்த்து வந்துள்ளார். 

இனி அது போன்று கேள்வி கேட்பவர்களுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதில் சொல்லிவிட்டேன் என்றும், உனக்கு எங்களிடம் இனி நான் பாடுவதற்கு பயப்பட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவலை கேட்ட அரங்கத்தில் இருந்த அனைவரும் மிகவும் வருந்தியவாறு தங்களுடைய வருத்தத்தை காட்டி இருந்தனர்.Post a Comment

Previous Post Next Post