திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் ஒரு திரைப்படத்தில், எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று ஒரு வசனம் பேசுவார்.
அதுபோல தான் இன்று பலரும் பல நிலைகளில் இருந்து தற்பொழுது வேறு ஒரு விதமாக மாறி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து தான் போகின்றனர் ரசிகர்கள்.
குறிப்பாக விஜயகாந்த் அவர்கள் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விஜயகாந்த் இப்படி எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் என்று மிகவும் வேதனைக்கு உள்ளாகி கருத்துகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.
தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த திரு விஜயகாந்த் அவர்கள், தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார்.
மக்கள் இவரை கருப்பு எம்ஜிஆர் என்று அழைத்தனர். இவரது செயல்பாடுகள் அனைத்தும் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் செயல்பாடுகளை ஒத்திருந்ததால், இவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று தான் மக்கள் அழைத்தனர்.
கூட நடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னை தேடி வருபவர்களுக்கும் சாப்பாடு அளித்து, உண்டு பசியாற ஏற்பாடு செய்தவர். இதனால் தான் இவருக்கு மக்களின் ஆதரவு பெருகியது.
தொடர்ந்து அரசியலில் இருந்து வந்த விஜயகாந்த் அவர்கள் வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தார்.
மதுவிற்கு அடிமையானதால் உடல்நிலை மாதிரி மோசமானதாக எதிர் தரப்பினர் இவரைப் பற்றி விமர்சித்தாலும், இவருடைய நல்ல உள்ளங்களுக்காக மக்கள் இன்றளவும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து உடல்நிலை மோசமானது காரணமாக உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக விஜயகாந்த் அவர்கள் அந்த புகைப்படத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிகவும் வருந்தி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடல்நிலை முன்னேறி மீண்டும் வந்து கட்சியை நடத்தி மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் என்றும் கூட பலர் இவருக்காக காத்திருக்கின்றனர்.