பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து களைகட்டி வருகிறது. இந்த வாரம் யார் வெளியேறுவது என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திடீரென கானா பாலா தான் என கார்டை கட்டி கமல் அதிர்ச்சி அளித்தார்.
அதற்கு முன்பு கானா பாலா, பிக் பாஸ் வீட்டில் முதலில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று கமலுக்குவேண்டுகோள் விடுத்தார் .
அதன்பிறகு தான் கமல் எலிவேஷன் கார்டு காட்டினார். அதன் பிறகு கானா பாலா எல்லா போட்டியாளர்களும் சென்று கை கொடுத்து வந்தார். அப்பொழுது சோபாவில் சித்ரா மட்டும் அமர்ந்தவாறு அவருக்கு கை கொடுத்தார்.
அப்போது கானா பாலா நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக தான் சொன்னேன் என்று அதற்கு விளக்கம் கொடுத்தார்.
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து விசித்திரா அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ஒரு சில போட்டிகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.