சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம ட்விஸ்ட் கொடுக்கும் ஜெயிலர் படத்தின் REVIEW!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம ட்விஸ்ட் கொடுக்கும் ஜெயிலர்  படத்தின் REVIEW!!

JAILER MOVIE


ஜெய்லர் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,ஜாக்கி ஷெராப் யோகி பாபு ,விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார்.

அவருடைய மகன் வசந்த ரவி உதவி கமிஷனர். சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்து அதில் தீவிரமாக இறங்குகிறார்.

JAILER MOVIE


 வசந்த ரவி சிலை கடத்தலை செய்யும் விநாயகம் ஆளான சரவணன் கைது செய்து விசாரிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் விநாயகம் வசந்த் ரவி கடத்தி விடுகிறார் .

ஆனால் வசந்த ரவி கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ரஜினியின் குடும்பத்தினரையும் கொள்ள வில்லன் விநாயகம் முயற்சிக்கிறான்.

 தன் மகனை கொன்றவர்களை பழிவாங்கி தனது குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி இறங்குகிறார் நம் தலைவர் ரஜினிகாந்த். 

இதுக்கப்புறம் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம் .படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

JAILER MOVIE


 கடந்த சில படங்கள் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

 இந்த படத்தில் அந்த குறை எதுவும் இல்லை எத்தனை வயதிலும் தன்னுடைய நடிப்பிலும் ஸ்டைலிலும் ரஜினி அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மகனை காணவில்லை என்றதும் களத்தில் இறங்குகிறார் .ஃப்ளாஷ்பேக் காட்சிகள் காட்சிகளாக இருந்தால் கூட அதில் இளமையான ரஜினிகாந்த் அதிரடி காட்டுகிறார்.

JAILER MOVIE



யோகி பாபுகும் ரஜினிக்கும் ஆனா காட்சிகள் எல்லாம் காமெடி இவர்கள் இருவரின் காமெடியும் இடைவேளை வரை படத்தை சுறுசுறுப்பாக கொண்டு செல்கிறது.

 பிறகு நடிகர் சுனிலின் காட்சிகள் வேகத்தடையை தந்தாலும் கிளைமாக்ஸ் சரி செய்து விட்டார் நெல்சன்.

ஆனால் படத்தில் கதாநாயகி என்று யாரும் கிடையாது இதனால் ரசிகர்கள் ஏங்கி உள்ளன தமன்னா ஒரு சில நிமிடங்களை வந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் காட்சி தருகிறார்.

JAILER MOVIE



அனிருத் இசையமைப்பில் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர் அதிலும் முக்கியமாக காவாலா பாடல் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் வெளியான ரஜினியின் இரண்டு மூன்று படங்களை ஒப்பிடும்போது ஜெயிலர் படம் ரஜினியின் ரசிகர்களை திருப்தி படுத்தியும் மற்றும் உற்சாகப்படுத்தும் உள்ளது.