சினிமாவில் கதாநாயகன் அனைவருக்கும் உதவி, நல்ல பெயர் எடுப்பார். வில்லன்கள் அனைவரும் காட்டப்படுவார்.
ஆனால் உண்மையில் நிஜ வாழ்க்கையில் நிறைய வில்லன்கள் ஹீரோவாக இருக்கின்றனர்.
அந்த கால நம்பியார் முதல், இந்த கால தீனா வரை அனைவருமே அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
உண்மையில் சொல்லப்போனால் திரையில் ஹீரோவாக நடிக்கும் ஹீரோக்களை விட, வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் தான் உதவி செய்யும் மனப்பான்மை அதிகமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ராஜா எங்க ராஜா என்ற திரைப்படத்தில் வில்லனாகநடித்ததின் மூலம் பிரபலமானவன் தான் ராஜ நரசிம்மன்.
1995 ஆம் ஆண்டு இருந்தார் திரைப்படம் வெளிவந்தது. அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ராஜ நரசிம்மன் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில், ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அன்றாடம் அவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 100 ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகன் கூட இந்த அளவுக்கு உதவி செய்வது கிடையாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.