விஜய் டிவி பிரியங்காவை காணோம்னு சொல்லிட்டு இருந்தவங்க மத்தியில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரியங்கா !! உற்சாகத்தில் ரசிகர்கள்
விஜய் டிவியின் பிரியங்கா தேஷ்பாண்டே. பிரியங்காவின் அழகு, பேச்சு திறன், வெகுளித்தனம் என இது பிடிக்கும் அது பிடிக்கும் என பிரித்து பார்க்கவே தேவை இல்லை. பிரியங்கா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் எனும் அளவிற்கு உலகளவில் பிரபலமானவர்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ரஜோ வூட்ல பார்ட்டி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி பிரியங்கா என்றாலும் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு சென்றது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் வெற்றியாளர் ஆனார். பிரியங்காவிற்காகவே அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தற்போது அவர் சூப்பர் சிங்கர் சீசன் 6.5 இன்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக வர உள்ளார்.
பிரியங்கா தனது குடும்பத்தில் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவரின் குடும்பம் அவரின் உலகம் என பல முறை அவரே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். பிரியங்காவின் தம்பிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் போட்டோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார் பிரியங்கா.
நான் வந்துட்டேன்னு சொல்லு இந்த அழகான முகத்தை பார்த்தவுடன் என்னுடைய கவலைகள் மறந்து திரும்பி வந்துட்டேன்னு சொல்லல இன்ஸ்டாகிராம் பக்கத்துல அவர் ஷேர் செய்துள்ள புகைப்படம் அதிக அளவில் லைக்குகளை பெற்றுள்ளது.
0 Comments