முன்னாள் முதல்வர் மறைந்த வள்ளல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருகில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?
தற்பொழுதே இவர் ஒரு பிரபல நடிகர் ஆக இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் ஒன்றும் பெரிதாக வெற்றியடையவில்லை.
வாரிசு நடிகரான இவருக்கு நல்ல வாய்ப்புகள் வந்த போதும், சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் தொடக்கமே தோல்வியில் தான் ஆரம்பமானது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் ஒன்று வெற்றி பெற்றது. அதற்கு முன்பு பார்ப்பதற்கு அவருடைய அப்பா போலவே இருப்பதால், பெரிய அளவு திறமை ஏதும் இல்லாத நிலையில் அவரது திரை வெற்றி பயணம் தொடங்கவே இல்லை.
தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோல்வியை சந்தித்து வந்த அவர் வேறு யாரும் அல்ல அருண் விஜய் தான்.
எம்ஜிஆர் அருகில் இருக்கும் குழந்தையும் அவர்தான். கடந்த சில வருடங்களாக தன்னை மேலும் மெருகேற்றி கொண்டு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த தற்பொழுது வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
கட்டுமஸ்தான உடம்பு சிக்ஸ் பேக் மற்றும் சினிமாவுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் கற்றுக்கொண்டு புதிய பாதையில் தன்னுடைய சினிமா பயணத்தை துவக்கி வெற்றியும் பெற்று வருகிறார் அருண் விஜய்.