ரோபோ சங்கர் நம்மையெல்லாம் கலகலக்க வைத்து சிரிக்க வைத்தவர். விஜய் டிவியில் என்றாலே அது ரோபோ சங்கர் தான்.
பல்வேறுபட்ட மேடை நிகழ்ச்சிகளில் நிமித்து செய்து தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் எங்கும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தவர். சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டக்கூடிய சக்தி மிக்க நகைச்சுவை உணர்வாளராக இருந்தவர்.
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி பொறுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், அதனை எடுத்து சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அடி எடுத்து வைத்து பிரபல நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய் திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் அஜித் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் அதிகம் நெருக்கம் காண்பித்து வந்த ரோபோ சங்கர் திடீரென திரைப்பட நிகழ்ச்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் விலகி இருந்தார்.
சிறிது நாட்களாக சமூக இணையதளங்களில் கூட தன்னுடைய வீடியோக்களை பதிவிடாமல் இருந்த ரோபோ சங்கர் தொடர்ந்து முகம் காட்டாமல் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக அவரைப் பற்றிய புரளிகள் அனுமானங்கள் தொடர்ச்சியாக இணையதளங்களில் வெளியாகி வந்து கொண்டே இருந்தன.
திடீரென ஒரு நாள் சமூக இணையதளத்தில் வெளியான அவர்களுக்கு உடல் இளைத்த போட்டோக்களால் ரசிகர்கள் மிகவும் கலவரம் அடைந்து போயிருந்தனர். காரணம் அவருக்கு சரி செய்ய முடியாத உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடிய நோய் வந்திருக்கிறது அதனால் அவர் திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டு இவ்வாறு காணப்படுகிறார்தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஒரு சில மாதங்களில் இது போன்ற பரவலான பேச்சுக்கள் அடிபட்டது தொடர்ந்து, அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அதற்கு பதில் அளித்து அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.
தவறான பழக்கவழக்கத்தால் தனக்கு மஞ்சள் காமாலை என்ற ஜான்டிஸ் நோய் வந்திருப்பதாகவும், அதன் காரணமாக உடல் இழைத்து மெலிந்து காணப்படுவதாகவும், தற்பொழுது அந்த கெட்ட பழக்க வழக்கங்களை அனைத்தையும் விட்டுவிட்டு,
முறையான சத்தான சாப்பாடுகளை எடுத்துக்கொண்டு நோய்க்கு வைத்தியம் செய்து வருவதாகவும் அதில் இருந்து தற்போது முழுமையாக மீண்டும் இருப்பதாகவும் ரோபோ சங்கர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய குடும்பம் இணைந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்தார். தன்னுடைய உடல் பிரச்சினைகள் வைத்தியம் செய்து வந்ததன் காரணமாக தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும், முன்பு போன்ற தோற்றத்தை விரைவாக அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் அதை தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஒரு சிலர் ரோபோ சங்கருக்கு வந்தது மஞ்சள் காமாலை தானா என்ற சந்தேக கண்ணன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து அவர் விளக்கம் அளித்த பிறகு மீண்டும் அது பற்றிய சரியான கேள்வி தேவையா ஒரு சாரார் கேட்டு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.