OPPO மொபைல் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 

OPPO மொபைல் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா ?



தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எப்படியோ அப்படி போல தெலுங்கு சினிமாவிற்கு அமைந்த இயக்குனர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இவர் தெலுங்கில் இயக்கிய நான் ஈ மற்ற மொழி ரசிகர்களிடம் நன்கு பிரலமாக அவர் இயக்கிய அடுத்த படமான பாகுபலியை பல மொழிகளில் வெளியிட்டார்.

பாகுபலி திரைப்படம் அவருக்கு வேறலெவல் பெயர் பெற்றுக்கொடுத்தது.



அப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து RRR என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பரான வெற்றியையும் கண்டார்.

இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகவும் ஆஸ்கர் விருது பெற்றார்.

படங்களை இயக்கி பல கோடிகள் சம்பாதித்த இவர் தற்போது நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதாவது அவர் OPPO மொபைல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.



அந்த விளம்பரத்திற்காக மட்டும் அவர் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது, அதோடு ஒரு வருடம் அக்கம்பெனியில் அம்பாசிடராக இருக்கவும் தனியாக சம்பளம் பெற்றதாக தெரிவிக்கின்றனர்.