எங்கு போனாலும் குல்லாவுடன் வரும் சிவகார்த்திகேயன்! என்னவா இருக்கும் !!
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவர் எங்கு போனாலும் ஒரு குல்லா அணிந்து தான் வருகிறார்.
அதனால் அவருக்கு தலையில் என்ன பிரச்சனை என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
விளக்கம்
இது பற்றிய கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், அவரது அடுத்த படமான SK 21 படத்திற்கான கெட்டப்பில் இருப்பதாகவும், அதை வெளியில் காட்ட கூடாது என படக்குழு கண்டிஷன் போட்டதால் தான் குல்லா உடன் இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.
'எவ்வளவு வெயில் அடித்தாலும் இதை மாட்டிக்கொண்டு சுத்த வேண்டி இருக்கு' என சிவகார்த்திகேயன் காமெடியாக இந்த விஷயம் பற்றி பேசிவிட்டு போனது குறிப்பிடத்தக்கது.