நடிகை நளினி 80ஸ் நடிகை ஆவார். அவர் ராமராஜன் முதல் டி ஆர் வரை அனைத்து தரப்பு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
80 நடிகைகளில் மிக அழகாக நடிக்கும் நடிகைகளில் வரும் ஒருவர். நடிகர் மற்றும் இயக்குனர் ராமராஜனுடன் ஏற்பட்ட காதலில் அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
இல்லற வாழ்வில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அதன் பிறகு அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக இருவரும் திருமண விவாகரத்து பெற்றுவிட்டனர்.
ஒரு கட்டத்தில் ராமராஜன் உடன் பேசுவதை நிறுத்திய நளினி அவர்கள் தொடர்ந்து தனக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொண்டு அதில் கவனம் செலுத்த துவங்கினார்.
பெரிய திரையில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சின்னத்திரைக்கு சென்று தொடர்கள் மற்றும் மெகா சீரியல் நடித்து வந்தார். அவர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் சின்ன பாப்பாவாக நடித்து தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து விதமான ரசிகர்களையும் தன் பால் ஈர்த்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நளினி அவர்கள், ராமராஜன் உடனான பிரிவை குறித்து பேசுகையில், ராமராஜன் அவர்களை பிரிந்ததால் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. இருவரும் சேர்ந்துதான் அந்த முடிவை எடுத்தோம் என்று தற்பொழுது ஓபன் ஆக பேசி உள்ளார்.