விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அது இது எது', 'கலக்கப்போவது யாரு','சிரிச்சா போச்சு' போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன்னுடைய காமெடியான பேச்சாலும், உடல்மொழியாலும் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன்.
இப்படி அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. குடும்பத்தினர் மத்தியில் மிகவும் எளிமையாக நாஞ்சில் விஜயனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.