நடிகை அனுஷ்கா. தமிழகம் மட்டுமல்ல தென்னக முழுமைக்குமே மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்.
தற்பொழுது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவை, பிரபல நடிகர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து அந்த காதல் நிறைவேறாமல் ஏமாற்றத்தில் முடிந்த கதை ஒன்று வெளியாகி உள்ளது.
ஆனால் அந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்த அனுஷ்கா அவரது காதலை மறுத்துவிட்டாராம். அவர் நடித்த திரைப்படங்களில் தேவசேனா கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. பாகுபலி படத்தில் கிடைத்த அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார்.
இப்பொழுது பிரபாஸ் அனுஷ்கா இருவருக்கிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்ற ரீதியில் அவரின் செயல்பாடுகள் இருந்தன.
ஆனால் அந்த சமயத்தில் மீடியாக்கள் இருவருக்கு இடையேயான காதல் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தன.
ஆனால் இது பற்றி பிரபாஸ் மற்றும் அனுஷ்கா அவர்கள் இதுவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பு தகவல்களோ தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.