என்னடா இது இவரா இப்படி? அட.. இதுபோல இவர இத்தனை ஆண்டுகளும் பார்த்ததே இல்லையே... என்று கூறும் அளவிற்கு தன்னுடைய முகத்தோற்றம் மற்றும் நடை உடை பாவணங்களை மாற்றிக் கொண்ட ஒரு மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகர் சூரி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தின் நாயகனாக நடித்த சூரி, சினிமா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் உலக தமிழ் மக்கள் அனைவருமே சூரியனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து தன்னுடைய நடிப்பின் உச்சகட்டத்தை தொட்டிருந்தார் சூரி அவர்கள்.
விடுதலை டு திரைப்படம் அடுத்து வெளியாக வந்ததற்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி, வெளியாகவிருக்கும் திரைப்படம் கொட்டு காளி.
இந்த திரைப்படத்திலும் சூரி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக கதாநாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார் நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜில் புதிய லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பார்ப்பதற்கு ஒரு முன்னணி கதாநாயகன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அனைவரையும் தற்பொழுது கவர்ந்து வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள்" சூரி சார்..
உண்மையிலேயே நீங்கள் பார்ப்பதற்கு ஹீரோ மட்டுமல்ல" ஒரு முன்னணி நடிகர் போன்ற தோற்றத்தை பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.