ரெஜினா படத்தின் நாயகி சுனைனா ரசிகர்களுக்காக செய்திருக்கும் புதிய விஷயம்! என்ன தெரியுமா?

தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆண்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சுனேனா. 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தான் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார்.

முன்னதாக நடிகர் விஷால் நடித்த லத்தி படத்தில் சுனைனா நடித்திருந்தார். படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் பெற்று இருந்தார்.


தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 



நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய பாடல் எழுதியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர், டிரைலர்  நல்ல வரவேற்பினை பெற்றது. 

வரும் ஜூன் 23ஆம் நாள் வெளியாக உள்ள ரெஜினா படத்தின் டி-ஷர்ட்டுகளை ரசிகர்களுக்கு இலவசமாக அளித்துள்ளார் நடிகை சுனைனா. ரசிகர்கள் எதிர்பார்க்காத வேளையில் சுனைனா அவர்களை சந்துத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.