பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் திறமையின் மூலம் பிரபலமானவர். இவர் ஆஸ்கர் உட்பட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர்.
தமிழ்நாட்டின் சொத்தாகவும் இந்தியாவின் அடையாளமாகவும் உலக அரங்கில் ஜொலித்து வருகிறார். எப்போதுமே உயர்த்தி கூறும் ரசிகர்கள் நேற்று வெளியான ஒரே ஒரு போஸ்டரால் கடுப்பாக உள்ளனர்.
அதாவது கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சையானது. தற்போது, இவர் அந்த இயக்குனருடன் கூட்டமைத்து கொண்டதாக போஸ்டர் வெளிவந்ததில் தெரியவந்துள்ளது.
சர்ச்சை
இதனை தொடர்ந்து, சுதிப்தோ சென் இயக்கும் படம், சஹாராஸ்ரீ என்ற டைட்டிலில் தொழிலதிபர் சுப்ரதா ராய்யின் பயோபிக்காக உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியாகியுள்ளது.