ஆக்சன் கிங் அர்ஜுன் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா ?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!...
1984-ல் ராமநாராயணன் இயக்கிய நன்றி என்னும் திரைப்படத்தின் இரண்டு நாயகர்களில் ஒருவராக தமிழ் திரைத் துறையில் முதல் தடம் பதித்தார். அதன்பின் தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்தார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர், கதை திரைக்கதை ஆசிரியராகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தில் பிறந்ததால் இவரது படங்களில் தேசப்பற்று மிகுதியாக இருக்கும். தேசப்பற்றை முன்னிறுத்திய படங்களிலும், தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களிலும் நடித்துள்ளார்.
அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது
இயக்குநர் ஷங்கர் அறிமுகமான ஜெண்டில்மேன் படத்தின் நாயகனாக நடித்தார் அர்ஜூன். இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்து அர்ஜூனின் சினிமாவில் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருபடமாக மாறியது.
அதிரடியான நடிகராக கலக்கிவந்த அர்ஜூன், அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். அதிரடி வில்லன்: அதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
விஷால் திரைப்படமான இரும்புத்திரை திரைப்படத்திலும் இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் அர்ஜூன்.அர்ஜூன் படத்திற்கு லட்சத்தில் சம்பளம் வாங்கி இருந்த நிலையில், லியோ படத்தில் அவருக்கு 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தீவிர ஆஞ்சநேயர் பக்தரான இவர் சென்னை கிருகம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கோவில் ஒன்றையும் கட்டி உள்ளார்.அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.