தன் வீட்டு செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் அழகிய போட்டோஸ்......
தென்னிந்திய நடிகைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓடவிடும் அளவுக்கு 43.5 மில்லியன் ரசிகர்களை அதாவது 4 கோடி ரசிகர்களை கொண்டுள்ள ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாகவும் நேஷனல் கிரஷ்ஷாகவும் உள்ளார்.
இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை தங்களது கனவு கன்னியாகவே பார்த்து வருகின்றனர். கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், மகேஷ்பாபுவுடன் இணைந்து சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்தார்.
அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஷ்மிகா இந்த ஆண்டு புஷ்பா 2 படத்திலும் ரசிகர்களை கவர காத்திருக்கிறார்.
தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படங்களில் நடித்த ராஷ்மிகா கடந்த ஆண்டு இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து உலக அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார். அடுத்ததாக சல்மான்கானுடன் ஜோடி போட்டு சிக்கந்தர் படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது அவர் தன் செல்ல பிராணிகளுடன் கொஞ்சம் விளையாடும் போட்டோஸ் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.