சிவகார்த்திகேயனின் 5 வருட உழைப்புக்கு பலன் கிடைத்ததா.. அனல் பறக்கும் ‘அயலான்’ பட விமர்சனம்..
நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் பல தடைகளை கடந்து இன்று அயலான் ரிலீஸ் ஆனது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார்தான், இந்த படத்தின் இயக்குநர். அயலான் படத்துக்கு இசையமைத்திருப்பது இசைப்புயல் ஏஆர் ரகுமான். அயலான் படம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமா, மனித சக்தியை விட பெரிய சக்தியை உருவாக்கி, உலகத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆசைப்படும் வில்லன். அவனது கையில் ஏலியன் உலகத்தில் இருந்து தவறி விழுந்து பூமிக்கு வந்த ஒரு கல் கிடைக்கிறது. சக்தி வாய்ந்த அந்த கல்லை, வில்லன் ஆராய்ச்சி செய்யும்போது அந்த ஆராய்ச்சி கூடமே வெடித்து சிதறுகிறது. பூமியின் தட்பவெப்ப நிலை மாறுகிறது. விவசாயம் பாதிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது.
இதில் விவசாயத்துக்காக பாடுபடும் சிவகார்த்திகேயனும் பாதிக்கப்படும் நிலையில், ஏலியன் உலகில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், வில்லனை எதிர்க்கிறது. அப்போது வில்லன் கையில் இருந்து சக்தி மிகுந்த அந்த கல்லால் ஏலியனை அழிக்க முயற்சிக்கும் போது சிவகார்த்தியேனுடன் சேருகிறது ஏலியன். பிறகு சிவகார்த்திகேயனும், ஏலியனும் சேர்ந்து வில்லனின் சதித்திட்டங்களை முறியடித்து ஜெயித்தார்களா, மீண்டும் ஏலியன் திரும்பி சென்றதுதான் படத்தின் சயன்டிபிக் கதை. இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னை சிறந்த இயக்குநராக ரவிக்குமார் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
இந்த படத்தை பொருத்தவரை பிளஸ் பாயிண்டுகள் என்றால், ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். டெக்னிக்கல் சப்போர்ட் இந்த படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதாவது, விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் மிகச்சிறப்பாக படத்தை மாற்றியிருக்கிறது. அவர்களது கடின உழைப்பு திரையில் தெரிகிறது என்றோ சொல்லலாம். மேலும் காமெடி காட்சிகள் பிரமாதமாக இருக்கின்றன. யோகிபாபு, கருணாகரன், சிவகார்த்திகேயன், ஏலியன் காம்பினேஷன் காமெடி படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது.
அதனால் படத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. மற்றபடி படத்தில் இருக்கும் மைனஸ் பாயிண்டுகளாக, சிவகார்த்திகேயன் கெட்டப், நடிப்பு பல படங்களை போலவே இருக்கிறது. வித்யாசம் காட்டியிருக்கலாம். வில்லன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். அவருக்கும் நடிப்பு அறிமுமில்லை என்பது போல ஏனோ தானோவென்றுதான் நடித்திருக்கிறார். ஏஆர் ரகுமான் பின்னணி இசை போல பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி அயலான் ரசிகர்களின் மனங்களை வெல்வான் என்று உறுதி சொல்லலாம். “அயலான்” படத்தை பொறுத்தவரை 5க்கு 4 ஸ்டார் * * * * மகிழ்ச்சியாக தரலாம்.