விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் மகள் ! வெளியான தகவல் !


நடிகர் விக்ரம் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா. தெய்வத் திருமகள் திரைப்பட்டதில் மகளாக நடித்திருந்தார்.  இவர் தற்பொழுது பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனின் இளவயது காதலியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இதில் இவருடைய நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

18 வயது சாரா, 34 வயதுடைய விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசை அனிருத் அவர்கள். இயக்குனர் கௌதம். 

12 வது திரைப்படமான விஜய் தேவர் கொண்டாவின் இந்த திரைப்படம் சாரா ஜோடியாக நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.