இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வளர்ந்து நிற்கும் "தளபதி" விஜய் அவர்கள் நடித்த திரைப்படம் "லியோ". இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
அனைத்து தியேட்டர்களிலும், "ஹவுஸ்புல்" ஆகி ஓடியது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படத்தின் கதையம்சம் மற்றும் வித்தியாசமான இயக்கம் மக்களை கவர்ந்திழுத்தது.
அதன் வெளிப்பாடாக விஜய் நடித்த "லியோ" படம் சூப்பர் பஸ்டர் ஆக அமைந்தது. இத்திரைப்படம் இதுவரைக்கும் வசூலித்த தொகை மட்டும் தற்போது வரை 700 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது மேலும் அதிகரிக்க கூடும் என்றும் பட நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தை பற்றிய கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், வசூல் ரீதியாக விஜய் க்கு ஒரு "மைல்" கல் என்று தான் திரைத்துறை வட்டாரங்கள் கருதுகிறது.