நான் ஒரு முட்டாளுங்க... என வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு , பிக்பாஸ் பிரதீப் ட்வீட் !

 

bigboss 7 pradeep latest news

பெண்களின் உரிமை குரல் என்ற பெயரில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு, #பிக்பாஸ் சீசன் 7 வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்களுக்கு ப்ரியா விடுங்க என்று ஆறுதல் படுத்தியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ்7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பபட்டு வருகிறது. அதில் கலந்த கொண்ட பிரதீப் பெண்களின் உரிமை குரல் என்ற பெயரில் வெளியேற்றபட்டிருந்தார்.

pradeep bigboss 7


பிரதீப் வெளியேறியதை ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை. அவரிடம் போதுமான காரணத்தை கேட்டறிந்து இருக்கலாம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் அவரை வெளியேற்றியது ஏமாற்றத்தருகிறது என்று அவருடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே திருச்சி நிஷா அவர்கள் , பிரதீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் பிரதீப், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கமலஹாசனை மிகவும் பிடிக்கும் என்றும், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


இதனை அடுத்து, யூடூப்பர்கள் கன்டன்ட் ஆக எப்படி வேண்டுமானால் செய்யட்டும்.அதை பற்றி கவலையில்லை. நமக்கான கன்டன்ட் நாமே உருவாக்குவோம். பிரியா விடுங்க என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

Previous Post Next Post