பழம்பெரும் நடிகை மனோரமாவின் முதல் கணவர் யார் தெரியுமா? வெளியான அரிய தகல்கள் !

 

manorama kanavar

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனோராமவின் கணவர் ராமநாதன் என்கிற நாடக நடிகர் ஆவார். திரைப்படங்களுக்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோதிடர் ஒருவர் சொன்ன ஜாதக பலனை நம்பி, பெற்ற மகனையே வெறுத்த அவர், இரண்டாண்டுகளுக்கு மேல் திருமண வாழ்வில் ஈடுபடாமல், மனோராமவை பிரிந்தார். 

இதனால் மனம் வெறுத்த ஆச்சி, கடைசிவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி தகவல் ஒன்று முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அச்செய்தி அப்படியே உங்களுக்கு பகிர்கிறோம். நன்றி.

ஜோதிடம் உண்மையாக இருக்கலாம்.

ஆனால் ஜோதிடர்கள் உண்மையாக இருப்பதில்லை.”

ஏற்கனவே பலமுறை இதைச் சொல்லியிருந்தாலும், 

இன்னும் ஒருமுறை இங்கே அதை சொல்ல வேண்டியதிருக்கிறது.

மனோரமாவின் வாழ்க்கையிலும் கூட ஜோதிடம் விளையாடியிருக்கிறது...

இல்லையில்லை... ஜோதிடர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

மனோரமாவின் கணவர் பெயர் ராமநாதன். அவரும் நடிகர்தான். 

1959 ல் புதுமுகமாக அறிமுகம் ஆனவர். அதற்கு முன்பே மனோரமாவுடன் இணைந்து நாடகங்களில் நடித்தவர்.

அவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் மனோரமா.

அது பற்றி ஆச்சி :

“என்கூட நாடகங்களில் வில்லனாக நடிச்சவர் எஸ்.எம்.ராமநாதன். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை நான் காதல்னு நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெச்சு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடிச்சுட்டு, பிள்ளை பெத்துக்க என் சொந்த ஊரான பள்ளத்தூருக்கு வந்துட்டேன்.

குழந்தை பிறந்து 16ஆவது நாள் என்னை வந்து பார்த்தார் என் கணவர். 

ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்."

ஏன் அப்படிச் சொன்னார் ராமநாதன் ?

சோகத்தோடு அந்த ஜோதிடக் கதையை சொல்கிறார் மனோரமா.

"ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன  பார்க்கப் போயிருக்கார். அந்த ஜோசியக்காரனோட பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.

இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக்காரன்.”

அப்புறம்...

மனோரமா சொல்கிறார் : 

"குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை.

உள்ள போனா, குழந்தையோட தொடை சிவந்திருக்கு.

பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.

வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.”

மனோரமாவின் இல்லற வாழ்க்கை, இரண்டே வருடங்களுக்குள் முடிந்து போனது.

(1964–1966)

1990 களின் இறுதியில் இறந்து விட்டாராம் ராமநாதன்.

எந்த ஜோதிடர் சொன்னாரென்று,

அந்தப் பச்சைக் குழந்தையை  மனோரமாவின் கணவர் வெறுத்தார் எனத் தெரியவில்லை.

அந்த ஜோதிடர் சொன்னது போலவே சொல்லக் கூடிய, பல ஜோதிடர்கள் இப்போதும் இங்கே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. 

ஆனால் இதுபோல கண்மூடித்தனமாக ஜோதிடர்களை நம்பும் கூட்டத்துக்கு இங்கே எப்போதும் குறைவில்லை.

ஜோதிடம் என்பது 

ஒரு தெய்வீக கலை.

ஆனால் பல ஜோதிடர்கள் 

இங்கே அரைகுறை.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான் !

(10 அக்டோபர் 2015)

ஆச்சி மனோரமா 

நினைவு தினம்.