"லியோ" படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. விஜய் அடுத்த "சூப்பர் ஸ்டார்" என்ற அந்ததஸ்திற்கு முன்னேறி இருக்கிறார்.
ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் நடிகரைவிட, இவரது படங்கள் அதிக வசூலை பெறுவதால், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக விஜய் மட்டும் வருவார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
அந்த வகையில் "தளபதி" விஜய் நடித்த லியோ படத்தில் வரும் ஹையான படக் காட்சிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருப்பது தற்பொழுது வெளியாகியுள்ளது.
அந்தக்காட்சிக்கு மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, VFX முறையில் படமாக்கபட்ட தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுப் படங்களுக்கு இணையாக அந்த காட்சி அமைப்புகள் த த்ரூபமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அந்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டு, ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.