அதனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு, விலை உயர்ந்த இருந்த கார் ஒன்றை பரிசளித்து இருந்தார். 72 வயதிலும் கூட துள்ளலுடன் நடித்த ரஜினிகாந்த் அவர்கள் தான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஜெயிலர் படம் வெற்றி அடைந்த அதன் மூலம் நிரூபித்திருக்கிறார்.
500 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்ற இந்த திரைப்படமானது, இன்றும் கூட பல திரையரங்கங்களில் அரங்கு நிறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் அவர் விருப்பத்தின் அடிப்படையில் புதிய ரக கார் ஒன்றை பரிசாக அளித்து பாராட்டி இருந்தார்.
தொடர்ந்து திரைப்படத்திற்கு முதுகெலும்பாக இருந்தது இசை என்றுதான் கூற வேண்டும். அதுவும் குறிப்பாக தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா, ஹூக்கும் பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பறந்து கொண்டிருக்கிறது.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத் அவர்களுக்கு அவர் எதிர்பாராத விதமாக, புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார் .
ஒரே ஒரு பாடலுக்கு துள்ளல் ஆட்டம் ஆடிய தமன்னாவுக்கும் கூட விரைவில் கார் பரிசு அளிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.