2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த திரைப்படத்தில் முரளி மணிவண்ணன் மனுசக்கரவர்த்தி ராதா வடிவேலு பலர் நடித்திருந்தனர்.
புதுமுக நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதா. இந்த திரைப்படத்தை அடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட, போதிய வாய்ப்புகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.
சுந்தரா டிராவல்ஸ் அந்த காலகட்டத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பிறகு நடிகை ராதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது படத்தில் நடிப்பதற்கு ஆர்வமில்லாமல் இருந்ததாகவும், வாய்ப்பு கிடைத்ததால் வேறு வழியில்லாமல் நடித்ததாகவும் தெரிவித்தார்.
சுந்தரா ட்ராவல்ஸ் முரளிக்கு ஜோடியாக நடிப்பதாக ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் மேனேஜர் லோகு என்பவர்.
படத்தில் நடிக்கும் பொழுது கொடுக்கப்பட்ட ஆடைகளை போடுவதற்கு மிகவும் கோத்தப்பட்டதாகவும் அந்த பேட்டியில் ராதா தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட கூச்சம் இருந்ததாக தெரிவித்தார்.
படம் வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற போதுதான் அந்த படத்தில் நடித்ததற்காக தான் பெருமைப்பட்டதாக தெரிவித்தார்.
அந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் வடிவேலு அவர்கள் தொடர்ந்து தனக்கு சப்போர்ட்டாக இருந்ததாகவும், புதுமுக நடிகை தானே என்று யூகோ பார்க்காமல் வேண்டிய உதவிகளை செய்ததாகவும் தெரிவித்தார்.
நடிகர் முரளியும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த படப்பிடிப்பின் போது உள்ள அனைத்து டெக்னீசியங்களையும் நண்பர்களாக நடத்திய விதம் நன்றாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு குடும்ப வாழ்க்கை தான் முக்கியம் என்று நினைத்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தற்போது வரை தன்னுடைய குடும்பத்தை காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாராவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்து விட்டால் அப்படியே அவர்களை நம்பி விடுவதாகவும், வெளிப்படையாக மனதில் தோன்றியது பேசி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒருவர் தன்னை நேசிப்பதாக கூறியதை நம்பி ஏமாந்து அதனால் பல நாட்கள் தூக்கம் கெட்டதையும் நினைவு கூர்ந்து இருந்தார்.இதற்கு முன்பு இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஊடகத்திற்கு முன் தோன்றி விளக்கம் அளித்தார். இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி தனக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க வேண்டாம் என்று அப்பொழுது கேட்டுக் கொண்டார்.