500 படங்கள் நடித்து இருந்தும் கூட ஏழையாகவே போய் சேர்ந்த காமெடி நடிகர்..!

 

thavakkai comedy nadigar

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில படங்கள் உச்சத்தில் தூக்கிவிடும். கொண்டாடும். சிறிது சரிக்கினால் தலைகீழாக விழுந்து மரண அடி கொடுக்கவும் தயங்காது.

அந்த வகையில் நமக்கு நன்கு அறிமுகமான காமெடி நடிகர் ஒருவர், தன்னுடைய இறுதி காலத்தில் மிகவும் சிரமப்பட்டு பொருளாதார ரீதியில் அடிபட்டு அதன் பிறகு சோகத்தில் கதை முடிந்தது.

அவர் யாருமல்ல நடிகர் தவக்களை என்ற சிட்டிபாபு தான்.

பாக்கியராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் சிறுவர்களில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் தவக்களை.

அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த தவக்களை, தான் சேர்த்து வைத்த பணத்தை வைத்து வடபழனியில் ஒரு வீடு வாங்கினார்.

தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்த பொழுது நடித்துக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் வருமானம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் ஒரு சில நண்பர்களுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து வெளியிடுவதற்கு ஆயத்தமானார்.

படப்பிடிப்பு பாதி கூட முடிவடையாத நிலையில் நண்பர்கள் பட தயாரிப்பில் இருந்து வெளியேறிவிட, மொத்த பண சுமையும் தவக்களின் மீது விழுந்தது.

எப்படியும் படம் வெற்றி பெற்று விட்டால் நல்ல சம்பாத்தியம் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், தான் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் அந்த பட தயாரிப்புக்காக செலவிட்டார்.

படம் வெளிவந்து நான்கு நாட்கள் கூட ஓடாத நிலையில், முழுவதுமாக தோல்வி படமாக அமைந்தது.

இதனால் தான் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய வடபழனி வீட்டையும் விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேறினார்.

இருந்த பணம் அத்தனையும் காலியான நிலையில், என்ன செய்வது என்று விழி பிதுங்கி இருந்த நேரத்தில், சினி மினி என்ற குழுவை உருவாக்கி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அதில் வந்த சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தவக்களை, இறுதி காலம் சோகமாகவே முடிந்தது.

, எத்தனை பணம் சம்பாதித்தாலும் கூட அதை சரியாக முறையாக பயன்படுத்த தவறும் பொழுது தவக்குலின் நிலைமை தான் வரும் என்பது மற்ற சினிமா நண்பர்களுக்கும் உணர்த்தியது.

என்றும் கூட சினிமாவை நம்பி வாழ்ந்து வரும் பல நடிகர்கள், வெற்றி கவுரவத்திற்காக பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், தன்னுடைய படு டோபத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்காக கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர்.

இது முற்றிலும் தவறான போக்கு என்று பல அனுபவஸ்தர்கள் கூறியிருந்த போதும், எப்படியும் வாய்ப்புகள் வந்து நிறைய சம்பாதித்து விடலாம் என்று நம்பிக்கையில் தொடர்ந்து தேவையில்லாத செலவுகள் செய்து வறுமையில்வாடி வருகின்றனர்