மறைந்த பிரபல கதாநாயகன்..! கண்டுகொள்ளாத ஊடகங்கள்...!

en uyir thozhan actor babu

என்னுயிர் தோழன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பாபு. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

அந்த கால ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த திரைப்படம் அதிக தியேட்டர்களில் ஓடி மக்களிடையே பிரபலமானது.

பாரதிராஜாவுடன் இணைஇயக்குனர் கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.

bharathi raja babu


என்னுயிர் தோழன் திரைப்படத்தின் கதை ஆனது ஒரு அரசியல் அடிமட்ட தொண்டனின் வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. 

ஜன ரஞ்சகமான அந்த திரைப்படம் ஆனது பட்டி தொட்டி எங்கும் ஓடி ரசிகர்களின் வெகுவான ஆதரவை பெற்றது.

அறிமுக நடிகரான பாபுவின் நடிப்பு அப்பொழுது சினிமா விமர்சனம் பெரிதும் பாராட்டப்பட்டது.

அந்த திரைப்படத்தை எடுத்து பொன்னுக்கு செய்தி வந்தாச்சு, பெரும்புள்ளி, மற்றும் தாயம்மா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடிகர் பாபு நடித்தார்.

சினிமா துறையில் கால் பதித்த ஒன்று இரண்டு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் போட்டி போடும் நடிகராக வளர்ந்தார்.

இதனை எடுத்து மனசார வாழ்த்துங்கள் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது, உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கும் காட்சிகள் டூப் போடாமல், ஆர்வக்கோளாறில் அவரே அதை செய்து முடித்தார்.

அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

சிகிச்சை சற்று பலன் அளித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கான சினிமா பட வாய்ப்புகள் குறைந்து போயன.

முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் பாபு, குறைந்த நாட்களுக்கு மட்டுமே நடக்க முடிந்தது. அதன் விளைவாக நடக்க முடியாமல் படுக்கையில் தன்னுடைய வாழ்நாளை கழிக்க தொடங்கினார்.

என்னடி என்ன ராதா மோகன் இயக்கத்தில் உருவான அனந்த கிருஷ்ணா என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். 

துரதிஷ்டவசமாக அந்த திரைப்படம் வெளிவராமல் போனது. தொடர்ந்து சிகிச்சையுடன் 30 ஆண்டு காலமாக படுக்கையில் இருந்த நடிகர் பாபு உடல்நல கோளாறு காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  மரணம் அடைந்தார். அதே நேரத்தில் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் தற்கொலை செய்து கொண்டதும் ஊடகங்களில் செய்திகள் பரவத் தொடங்கின.

மூத்த நடிகர் இயக்குனர், வசந்தகர்த்தா என பல துறைகளில் பரிமிளித்த நடிகர் பாபு அவர்களின் இறுதி சடங்கிற்கு, சினிமா வட்டாரங்களில் இருந்து எந்த ஒரு நடிகர் நடிகையையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரபலங்களில், இயக்குனர் பாரதிராஜா மட்டுமே அவரது இறுதி சடங்கு கலந்து கொண்டார். நடிகர் பாபு ஒரு அமைச்சரின் உறவினர் என்பது பெரும்பாலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜாராம் அதிமுக கட்சியைச் சேர்ந்தவரின் சகோதரியின் மகன் தான் நடிகர் பாபு.