நடிகை ஆண்ட்ரியா பல்வேறு தரப்பட்ட சர்ச்சைகளுக்கு உள்ளான பிரபல நடிகை.முன்னணி கதாநாயகர்களின் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று இருப்பவர்.
தொடர்ந்து சினிமா பாட்டு என தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொண்ட ஆண்ட்ரியா அவ்வப்பொழுது வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில் இலங்கை சென்று இருந்த ஆண்ட்ரியா அங்கு இருந்த புராதன கோயில் என இலங்கை நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருக்கிறார்.
இது குறித்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆண்ட்ரியா, தான் எல்லா மதத்துக்கும் மதிப்பு கொடுப்பவர் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் விஸ்வரூபம் மங்காத்தா பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது பிசாசு 2 மாளிகை நோ என்ட்ரி உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
அடிப்படையில் பாடகையான ஆண்ட்ரியா, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் தான் செல்லும் இடங்களில் எல்லாம் புராதான கோயில்களும் உள்ள இடங்களை தேடி தேடி சென்று தரிசனம் செய்து வருகிறார்.