சமந்தா மிகப்பெரிய பிரபலமான இந்திய நடிகை. இவர் பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
தொடர்ந்து திரையில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் சமந்தாவிற்கு, திடீரென அரிதாக ஏற்படும் தோல் வியாதி வந்தது.
இதன் பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட சமந்தா, தொடர்ந்து ஒரு சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுத்தார்.
ஓய்வெடுத்தற்கு பிறகு நடிகர் தேவர் கொண்டாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் மீண்டும் அவர் தன்னுடைய தோல் பிரச்சனையை தொடர்பான சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படப்பிரமோசனுக்கு பிறகு நியூ யார்க் செல்லவிருக்கும் , அங்கேயே மூன்று மாதங்கள் தங்கி தன்னுடைய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சமந்தாவுடன் அவருடைய தாயாரும் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு தொடர்ந்து வந்த இரண்டு பட வாய்ப்புகளை நிராகரித்து உள்ளார். சிகிச்சை பிறகு குணமடைந்த உடன் மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து தெரிவிப்பார் என்று அவரை அறிந்த நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.